வடமாகாண கொரோனா தொற்று விபரம்… யாழில் இரண்டு மரணங்கள்!

Date:

வடமாகாணத்தில் இன்று (6) 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று வட மாகாணத்தில் 707 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் 20 பேர், முல்லைத்தீவு மாவட்டம் ஒருவர், கிளிநொச்சி மாவட்டம் 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேர், தெல்லிப்பளை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் (இவர்கள் தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள்), சங்கானை சுகாதார  வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் ( 2 பேர் முதல்நிலை தொடர்பாளர்கள், 2 பேர் வீதி திருத்த பணியாளர்கள்) தொற்றிற்குள்ளாகினர்.

கிளிநொச்சி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்து சென்ற ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் யாழ் மாவட்டத்தில் மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளன. யாழ் நகர் பகுதியை சேர்ந்த 77 வயதான ஒருவரும், இளவாலையை சேர்ந்த 75 வயதான பெண்ணும் நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் இதுவரை 21 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. வட மாகாணத்தில் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

மட்டக்களப்பு  பிரதேசம் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருவரை இரும்பு கரண்டியால்...

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்! களுத்துறையில் 6 பேர் கைது!

களுத்துறை–கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில், சொகுசு பேருந்தொன்றை மோட்டார்...

இந்தியாவை உலுக்கிய அர்னாப் புயல்! 6 பேர் பலி; 15,000 மின்கம்பங்கள் சேதம்!

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய அர்னாப் புயலால் குறைந்தது ஆறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்