என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமான பாடகரும், நடிகருமான டிகேஎஸ் நடராஜன்!

Date:

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமானவர் பாடகரான டிகேஎஸ் நடராஜன். அவர் பாடல்கள் பாடியதுடன் படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். டிகேஎஸ் கலைக்குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார். அந்த குழுவில் இருந்ததால் தான் அவர் டிகேஎஸ் நடராஜன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.

1954ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் படம் மூலம் நடிகரான நடராஜன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக் என்று பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தவர். சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை தன்னை கவனிக்கச் செய்தவர். படங்கள் தவிர்த்து கச்சேரிகளிலும் பாடி வந்த நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

நடராஜனின் மறைவு குறித்து அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் தான் இயக்குநர்கள் தாமிரா, கே.வி. ஆனந்த், மூத்த நடிகர் செல்லத்துரை என்று மூன்று பேர் காலமானார்கள். இந்நிலையில் இன்று நடராஜன் இயற்கை எய்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்