‘ஆடைத் தொழிற்சாலை பணி முடித்து வீடு திரும்பிய போதே முடிவை அறிந்தேன்’: கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியின் கதை!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் முதல் நிலை பெற்ற
மாணவி கிளிநொச்சி அறிவியல்நகரில் இயங்கி வருகின்ற ஆடைத் தொழிற்சாலையில்
பணியாற்றியவராவார்.

பரீட்சை எழுதிவிட்டு தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைக்க ஆடைத்
தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்ற கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த
மகேஸ்வரன் கயலினி என்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவியே இரண்டு
ஏ, பி பெறுபேறுகளை பெற்று உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாட்ட மட்டத்தில்
முதல் நிலையை பெற்றுள்ளார்.

மூன்று சகோதரிகளை கொண்ட குடும்பத்தில் ஒருவர் திருமணம் செய்துள்ள
நிலையில் இரண்டாவது சகோதரி யாழ்பல்கலைகழகத்தின் தொழிநுட்ட பீடத்தில்
கல்வி கற்று வருகின்றார். தந்தை கூலித் தொழில். தாய் வீட்டுப் பணி.

எனவேதான் 2020 உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு குடும்ப பொருளாதாரத்தை தனியே
சுமந்து நிற்கும் தந்தைக்கு தோள் கொடுக்க ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்குச்
சென்றுள்ளார்.

பரீட்சை பெறுபேறு வெளிவந்த தினத்தில் கூட தனது ஆடைத் தொழிற்சாலை பணியை
நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய போதே பெறுபேறுகள் வெளிவந்த
செய்தியை அறிந்து தனது பெறுபேறுகளை பார்த்ததாகவும் தெரிவித்த கயலினி.
தற்போதும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பசுமை எதிர்காலத்தை நோக்கி கல்முனை சாஹிரா மாணவர்களால் உருவாக்கப்பட்ட Bio gas Unit வெற்றிகரமாக திறந்து வைப்பு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மாணவர்களின்...

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள்...

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்