கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு சாம்சங் ரூ.37 கோடி நன்கொடை!

Date:

கோவிட்-19 தொற்றுநோய் தீவிரமாக பரவி வரும் இந்த வேளையில், இந்த தொற்றை எதிர்த்து போராடும் முயற்சியாக இந்தியாவுக்கு ரூ.37 கோடி (5 மில்லியன் அமெரிக்க டாலர்) நன்கொடை வழங்குவதாக சாம்சங் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் காரணமாக முழு தேசமும் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

3 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.22 கோடி) மத்திய அரசிடமும், உத்தரபிரதேசம் மற்றும் தமிழக மாநிலங்களுக்கும் நன்கொடையாக வழங்குவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, சுகாதார அமைப்புக்கு உதவ, சாம்சங் 100 மில்லியன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும், 3,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஒரு மில்லியன் LDS சிரிஞ்சுகள் உட்பட 2 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.14.7 கோடி) மதிப்புள்ள மருத்துவ பொருட்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இவை உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு வழங்கப்படும்.

அதோடு சாம்சங் நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிரான தனது முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 50,000 க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த ஊழியர்கள் மற்றும் பயனாளிகளுக்கு தடுப்பூசி செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.2020 ஏப்ரலில் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தின் போது சாம்சங் 20 கோடி ரூபாய் பங்களித்ததும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்