31.3 C
Jaffna
May 8, 2021

முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் 2021 தொடர் ஒத்திவைப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 தொடர்  தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா இதனை அறிவித்துள்ளார்.

நைட் ரைடர்ஸ் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியும், வேகப் பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரும் தொற்றிற்குள்ளானதை அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான திங்களன்று நடக்கவிருந்த போட்டி இரத்தானது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து,  சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சன்ரைசஸ் அணியின் விருத்திமன் சஹா, டெல்லி அணியின் அமித்மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கபட்டு புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரி யாழில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்!

Pagetamil

வடக்கில் இன்று 43 பேருக்கு தொற்று!

Pagetamil

யாழில் வெளிநாட்டு காசு வரும் சிலர்தான் இராணுவத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்களாம்: சொல்கிறார் இராணுவத்தளபதி!

Pagetamil

Leave a Comment