அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ கடற்கரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு மனித கடத்தல் நடவடிக்கையின் போது நேற்று மர படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் உயிர்காவலர்கள், அமெரிக்க கடலோர காவல்படை மற்றும் பிற ஏஜென்சிகள் காலை 10.30 மணியளவில் பாயிண்ட் லோமாவின் தீபகற்பத்திற்கு அருகே கவிழ்ந்த கப்பல் பற்றிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து சென்று மீட்டதாக சான் டியாகோ தீயணைப்பு-மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் மூன்று பேர் இறந்தனர். மேலும் 27 பேர் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று துறை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் ய்சியா கூறினார். கேப்ரில்லோ தேசிய நினைவுச்சின்னத்திற்கு அருகே அவர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, உடைந்த மரம் மற்றும் பிற பொருட்களின் “பெரிய குப்பைகளின் குவியல் மட்டுமே இருந்தது எனக் கூறினார்.
பாயிண்ட் லோமாவின் அந்த பகுதியில் பாறைகள் உள்ளதால், அலைகள் படகில் வேகமாக அடித்துக் கொண்டே இருக்கக்கூடும். அதனால் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம்.” என்று யேசியா கூறினார்.
மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக மக்களை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்காக கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு வகை மோட்டார் பொருத்தப்பட்ட குறைந்த ஸ்லங் பாங்கா படகில் இந்த குழு சென்றிருக்கலாம் என்றும் ஆனால் அது தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.