திருமணமாகாமலேயே கர்ப்பம், அபார்ஷன், தற்கொலை முயற்சி; போலி செய்திகளால் கடுப்பான இலியானா!

Date:

நான் கர்ப்பமாகி, கருவை கலைத்துவிட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. மேலும் நான் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதும் உண்மை இல்லை என இலியானா தெரிவித்துள்ளார்.

20,000 பேருக்கு மேல இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த இலியானா கேடி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். பின்னர் விஜய்யின் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். டோலிவுட்டில் அவரின் கெரியர் உச்சத்தில் இருந்தபோது பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவே அங்கேயே செட்டிலாக முடிவு செய்தார்.

இதையடுத்து ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றினார். பாலிவுட்டில் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை இதுவரை பெற முடியவில்லை. இதற்கிடையே அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோனை காதலித்தார்.

அவர்களுக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இலியானா பேட்டி ஒன்றில் தன்னை பற்றி வந்த இரண்டு வதந்திகள் குறித்து பேசியிருக்கிறார்.

உங்களை பற்றி வெளியான ஏதாவது பொய்யான செய்தியை பார்த்து சத்தமாக சிரித்தது உண்டா என்று இலியானாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

சில செய்திகள் இருக்கிறது. நான் கர்ப்பமாக இருந்ததாகவும், கருவை கலைத்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. அதை பார்த்து வருத்தப்பட்டேன். எப்படித் தான் இப்படி எல்லாம் எழுதுகிறார்களோ.

மேலும் ஒரு செய்தியில் நான் தற்கொலைக்கு முயற்சி கூட இல்லை தற்கொலையே செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. நான் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆனால் பிழைத்துக் கொண்டதாகவும், என் வீட்டு பணிப்பெண் அந்த தகவலை உறுதி செய்ததாகவும் செய்தி வெளியானது.

எனக்கு பணிப்பெண்ணே கிடையாது. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன். இது போன்ற தகவல் அவர்களுக்கு எங்கிருந்து தான் கிடைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

முன்னதாக இலியானா, ஆண்ட்ரூ நீபோனை காதலித்தபோது கர்ப்பமாக இருந்தாக கடந்த 2018ம் ஆண்டு பேசப்பட்டது. அது குறித்து அறிந்த இலியானாவோ, நான் கர்ப்பமாக இல்லை என்று இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்