‘எலிக்காய்ச்சல் வந்து சாவாய்’: யாழில் நிதி கொடுக்க மறுத்தவர்களை சபித்த மதபோதகர்!

Date:

தேசிய மக்கள் சக்தியினையும் அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தி கட்டாயமான முறையில் நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்திய மதபோதகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடிப் பகுதியில் நேற்று முன்தினம் (7) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும் அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தியே நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நெல்லியடிநகரில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது நிதி கொடுக்க மறுத்தவர்களை அனுரவின் ஒளிப்படத்தைக் காண்பித்து பெயரைக் கூறி அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற்ற முற்றப்பட்ட போது வர்த்தகர்களுக்கும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டோருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த பின் விடுவித்துள்ளனர்.

நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந் நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்து நிதியை சேகரித்துள்ளனர். ஆனாலும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கியிருக்கவில்லை.

நிதிகொடுக்ப் மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து சாவாய் என்றும், அனுரவை நான் தான் யாழ்ப்பாணம் அழைத்து வந்தேன் எனவும் அனுர ஆட்க்களைப் பற்றித் தெரியும் தானே என அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த மதபோதகர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பிரசார மேடைகளில் ஆசியுரைகளை கூறி தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஆதரவு கோரி ஆசியுரைகளை வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்