அமெரிக்காவில் பனிப்புயல் – 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து

Date:

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

FlightAware எனும் விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையத்தளம் அத்தகவலை வெளியிட்டது.

இம்முறை குளிர்காலம் எதிர்பாராத அளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதாக Delta Airlines கூறியது. இதனால் அட்லாண்ட்டா (Atlanta) விமான நிலையத்திலுள்ள 5 ஓடுபாதைகளும் 2 மணி நேரத்துக்கும் மேல் மூடப்பட்டுள்ளன.

Delta Airlines விமானம் ஒன்றில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானத்தின் புறப்பாடு ரத்துச் செய்யப்பட்டது.

Dallas Fort Worth, Charlotte Douglas ஆகியவையும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த 2 விமான நிலையங்களிலும் 1,200க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்