இந்தியாவிலிருந்து இரகசியமாக நாட்டுக்குள் நுழைந்த குடும்பம் சிக்கியது: மன்னார் வழியாகவே பயணித்தனர்!

Date:

இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்து புத்தளம் வென்னப்புவ பிரதேச வீடொன்றில் பதுங்கியிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரின் இரண்டு பிள்ளைகளுடன் சுகாதார பிரிவினரால்  கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த பெண்ணுடன் இந்தியாவில் இருந்து வந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

இந்தியாவின் சென்னை குப்பம் பகுதியில் இருந்து குறித்த பெண் மீன்பிடிப் படகு மூலம் நேற்று முன்தினம் (30) அதிகாலை வந்து புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்துள்ளார்.

34 வயதான தாயும், 13 மற்றும் 4 வயதான பிள்ளைகளுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தலைமன்னாருக்கு வந்து, அங்கிருந்து மன்னாருக்கு சென்று, பேருந்தில் புத்தளம் பயணித்துள்ளனர்.

அவர் முச்சக்கர வண்டியொன்றிலும், கொழும்பு செல்லும் பேருந்திலும் பயணித்துள்ளார். 30ஆம் திகதி இரவு பேருந்தில் கொழும்பிற்கும் பயணித்து திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவின் அதிகாரிகள் புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் அவர் பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

அவருடன் தலைமன்னாருக்கு வந்த மற்றைய பெண் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்