வீட்டை உடைத்து சென்று ஆபாச படம் பார்த்தவருக்கு 6 ஆண்டு சிறை..

Date:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இளைஞர், 3 பெண்கள் தங்கியிருந்த வீட்டில் புகுந்து அவர்களது லேப்டாப்பில் ஆபாசப்படம் பார்த்தது மட்டுமல்லாது வீட்டை உடைத்த குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, லேட்பைபிள் ஆன்லைன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டு உள்ளதாவது, ஜோநாதன் ஜோஸ் ருயிஜ் என்ற 22 வயது இளைஞன், ஆரஞ்சு சிட்டி பகுதியில் 3 பெண்கள் தங்கியிருந்த வீட்டிற்கு திருடனாக புகுந்து உள்ளான். அங்கிருந்த லேப்டாப்பில் ஆபாசப்படங்களை பார்த்து உள்ளான். அங்கேயே அவன் சுய இன்பம் மேற்கொண்டதால், அவனது விந்து அந்த வீட்டின் ஆங்காங்கே சிந்தி இருந்தன. பின்னர் என்ன நினைத்தானோ தெரியவில்லை, அவன் அந்த வீட்டை இடித்து தள்ளி உள்ளான்.

இதுதொடர்பான புகார், ஆரஞ்சு சிட்டி போலீஸ் துறைக்கு வரவே, அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி உள்ளனர். அங்கு கிடைத்தே டிஎன்ஏ பிரதிகளின் அடிப்படையில், போலீசார் ஜோநாதனை கைது செய்தனர். ஜோநாதனும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணத்தினால், நீதிபதி அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

ஜோநாதன், இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டில், ஆரஞ்சு சிட்டி பகுதியில் உள்ள எல் மாடனா உயர்நிலைப் பள்ளியின் கழிவறைகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், 200 மணிநேரங்கள் அளவிற்கு சமூக சேவைகளை செய்ய அப்போது நீதிபதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார். இளவாலை பொலிஸ்...

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்