ஆறு அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்த கட்சிகள் தங்களுக்குள் உள்ளக மோதல்களின் விளைவாக இப்போது நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்ற உண்மையை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது அவர்களுக்கு பாதகமான நிலைமை ஏற்படலாம் என்பதால், தேசிய தேர்தல் ஆணைக்குழு, சம்மந்தப்பட்ட கட்சிகளின் பெயர்கள் வெளியிடாது. . .



