இலங்கையில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (31) அறிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 568 அக உயர்ந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்,
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (31) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, உக்கிர சிறுநீரக சிதைவடைவு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான ஆண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (31) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, உக்கிர சிறுநீரக சிதைவடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.