தலைவரின் உடலை பார்த்த அன்று சாப்பிடவில்லை: கட்டையாக இருந்ததால் பிள்ளையான் என்ற பெயர் வந்தது!

Date:

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை. சிறிய வயதில் அவரை நேசித்ததன் அடிப்படையில் அவரது உடல் காணப்பட்ட விதம் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான்.

பிள்ளையாரை போலிருந்ததால் எனக்கு பிள்ளையான் என்ற பெயர் வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில்,

நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த போது குபேரன் என பெயர் வைத்தார்கள். பின்னர் நான்கைந்து  பெயர் அதே பெயரில் இருந்ததால் என்னை பிள்ளையான் என அழைத்தனர். கட்டையாக, உருண்டையாக நான் இருந்தேன். அதனால் அந்த பெயர் வந்தது.

யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, வசதி படைத்தவர்கள் தமது சொத்துக்களை புலிகளிற்கு எழுதி கொடுத்துவிட்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றார்கள். அங்கு, புலிகள் தமது சொத்துக்களை பறித்து விட்டார்கள் என இராணுவத்திடம் முறையிட்டார்கள். இந்த பொலிஸ் முறைப்பாட்டை வைத்து வெள்ளவத்தையில் வீடு வாங்கி குடியிருந்தார்கள். அல்லது வெளிநாட்டுக்கு சென்றார்கள்.

யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் திரும்பி வந்து அந்த சொத்துக்களை உரிமை கோருகிறார்கள் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்