பூப்பறிக்கச் சென்ற ஆசிரியரின் சடலம் மீட்பு!

Date:

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்உள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில், பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர்.

நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியரான 33 வயதான பரந்தாமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இராணுவத்தின் கடேட் படைப்பிரிவின் கப்டன் தரத்தை சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்