UPDATE: பளை விபத்து: தாம் விற்ற டிப்பர் வாகனத்துடன் மோதியே வர்த்தகரும், பிள்ளைகளும் பலியாகினர்!

Date:

பளை, இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும், அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.

பளை, தர்மகேணியை சேர்ந்த மணல் வியாபாரியான அழகரத்தினம் சற்குணநாதன் (34) என்பவரே உயிரிழந்தார். அவரது இரண்டு மகள்கள் உயிரிழந்ததாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், உயிரிழந்தவர்கள் அவரது மகன்கள் என்பது தெரிய வந்துள்ளது.

9, 12 வயதுடைய மகன்களே உயிரிழந்தனர்.

மணல் வியாபாரியான அவர் காரில் சென்று கொண்டிருந்த போது, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானார்.

இந்த டிப்பர் இவரது பாவனையில் இருந்த நிலையில் அண்மையிலேயே அவரால் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அந்த டிப்பரை விற்பனை செய்த பின்னர் கொள்வனவு செய்த காரில் பயணித்த போதே விபத்தில் சிக்கினார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்