வடக்கில் இன்று (23) நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 23 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 21 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் யாழ் மாவட்டத்தில் 21 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், நோய் அறிகுறியுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற ஒருவரும், கோப்பாய் மற்றும் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாநகரசபை பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர், ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள்.
யாழ் புதிய சந்தை கட்டிட தொகுதியில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்றான பிசிஆர் சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.