3வது போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் வெற்றி!

Date:

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளின் பின் டேரன் பிராவோ சதம் அடிக்க, ஷாய் ஹோப், கிரான் பொலார்ட் ஆகியோர் அரைச்சதமடிக்க, இலங்கையை சிரமமின்றி வீழ்த்தி, ஒருநாள் தொடரை 3-0 என மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது.

நேற்றைய போட்டியில் இலங்கை 6 விக்கெட்டு இழக்கிற்கு 274 ஓட்டங்களை பெற்றது. இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ஓட்டங்களை பெற்று, 5 விக்கெட்டால் வெற்றியீட்டியது.

இலங்கையின் தொடக்க வீரர்கள் தனுஷ்க குணதிலக 36, திமுத் கருணாரத்ன 31 ஓட்டங்களை பெற்றனர். பதும் நிஷங்க ஆட்டமிழக்காமல் 55, வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை பெற்றனர்.

31.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் என்ற நிலையில், வனிந்து ஹசரங்க- பதும் நிஷங்க ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி வீழ்த்தப்படாத 123 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றது.

8வது இலக்கில் களமிறங்கிய ஹசரங்க 60 பந்துகளில் 7 பௌண்டரி, 3 சிக்கர்களுடன் 80 ஓட்டங்களை பெற்றார். 8வது இலக்கத்தில் களமிறங்கி இலங்கை வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். முன்னதாக நுவன் குலசேகர 73 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் அகில் ஹொசைன் 33 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகள் இலக்கை விரட்டியபோது, கடந்த இரண்டு போட்டிகளிலும் மிரட்டிய எவின் லூவில்ஸ் 13 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 64 ஓட்டங்கள், டேரன் பிராவோ 102 ஓட்டங்கள், பொலார்ட் 53 ஓட்டங்களை பெற்றனர்.

2016 ஜூன் மாதத்தின் பின் பிராவோ அடித்த முதல் சதம் இது.

சுரங்க லக்மல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் டேரன் பிராவோ, தொடர் நாயகன் ஷாய் ஹோப்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்