26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்று 307 தொற்றாளர்கள்!

நாட்டில் நேற்று 307 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,907 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 275 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,498 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 25 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

2,732 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, வைரஸிலிருந்து குணமடைந்த 395 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 84,648 ஆக உயர்ந்துள்ளது

வைரஸ் தொற்று சந்தேகத்தில் 305 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment