ஹெரோயினுடன் யாழ் நகரில் ஒருவர் கைது!

Date:

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரில் வைத்தே குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்