மூங்கிலாற்றில் சிவன் சிலை: மல்லுக்கட்டும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை!

Date:

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட மூங்கிலாற்று கிராமத்தில் உள்ள பிரதேச செயலகத்தின் ஆளுகையின் கீழ் உள்ள பொதுக்காணி ஒன்றில் சிவராத்திரியினை முன்னிட்டு நேற்று (10) சிவன் சிலை ஒன்று அமைக்கப்பட்டு கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்த நிலையில் பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு பிரசன்னமாகியதால் மக்களுக்கும் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதேச சபையின் அனுமதி பெற்றே அனைத்து ஆலயங்கள் கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையினை சபையின் உறுப்பினர் எஸ்.குகனேசன் மக்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்தும் குறித்த காணி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளதால் பிரதேச சபை எதுவித நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலை உள்ளதாக சபையின் தவிசாளர் அ.தவக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் பல கிறிஸ்தவ சபைகள் காணப்படுகின்றன. எண்னூறு வரையான இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். மக்கள் ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் நீண்டதூரம்தான் செல்ல வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் சிவராத்திரியினை முன்னிட்டு சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

பல சபைகள் மற்றும் ஏனைய மதங்களில் சிலைகள் அனைத்தும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அனுமதியுடனா கட்டப்பட்டுள்ளது என்ற கேள்வியினையும் மக்கள் கேட்டுள்ளார்கள்.

இதேவேளை இது குறித்து கிராம சேவையாளருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் கிராம மக்களின் விருப்பிற்கு அமைவாகவே இந்த சிலை வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது என கிராம அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்