கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று வெள்ளிக்கிழமை மாலை முதலாவது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதுடன் இன்று இரவு 08.30 மணிக்கு ஒன்பதாவது ஜனாஸாவும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்;களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டது
ஏற்கனவே அடக்கப்பட்ட ஏறாவூர் ஜனாசாக்கள் இரண்டுடன் சேர்த்து காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்த 3ஜனாசாக்களும் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து 4 ஜனாசாக்களும் என இதுவரை 09 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஏறாவூர் 02, சாய்ந்தமருது 02, மட்டக்களப்பு 01, காத்தான்குடி 01,
அக்கரைப்பற்று 01, சம்மாந்துறை 01, அட்டாளைச்சேனை 01 என 9ஜனாசாக்களும் இன்று இரவு 8.45வரையான நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ன.
குறித்த பணிகளை நேரடியாக பார்வையிடுவதற்காக ஒதுக்கப்பட்ட அடைக்கப்பட்ட பகுதிக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பங்கேற்று பார்வையிட்டார்.