கொழும்பு, டாம் வீதியில் சூட்கேசில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தின் பிரதான சந்தேகநபர், ஒரு பொலிஸ் அதிகாரியென்பது தெரிய வந்துள்ளது.
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஒருவரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டார்.
நேற்று முன்தினம் (1) டாம் வீதியில் அநாதரவாக விடப்பட்டிருந்த சூட்கேஸில் பெண்ணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது..
இது குறித்து சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 143 ஆம் வழித்தட பேருந்து ஒன்று அடையாளம் காணப்பட்டது. அந்த பேருந்திலேயே, சடலம் சூட்கேஸில் அடைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டது.
ஹன்வெல்லை பகுதியில் இருந்து சடலம் எடுத்து வரப்பட்டிருந்தது.
இது குறித்த விசாரணையில், பெப்ரவரி 28ஆம் திகதி ஹன்வெல்லையிலுள்ள விடுதியொன்றில், கொல்லப்பட்ட 30 வயது யுவதியும், உப பரிசோதகரும் ஒன்றாக தங்கியுள்ளனர். பொலிஸ் அதிகாரி படல்கும்புர பகுதியை சேர்ந்தவர்.
அடுத்த நாள், விடுதியிலிருந்து பொலிஸ்காரர் மட்டும் பொருட்களுடன் விடுதியை விட்டு வெளியேறியுள்ளார்.
குருவிட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். அவரது சடலம் மீது டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் விடுமுறையில் இருந்த உப பொலிஸ் அதிகாரி, இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார்.
அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.