மிருசுவில் பிள்ளையார் ஆலயத்தை இடித்து விட்டு தலைமறைவான டிப்பர் கைப்பற்றப்பட்டது (CCTV)

Date:

கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில், A 9 வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்த டிப்பர் வாகனம் இனம்காணப்பட்டு, பொலிசார் மீட்டனர்.

கடந்த 7ஆம் திகதி இரவு இனந்தெரியாதோரால் ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அங்கிருந்த சிசிரிவி கமராவை பொலிசார் ஆய்வு செய்த போது, டிப்பர் வாகனமொன்றினால் ஆலயம் இடிக்கப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஆலயத்திற்கு அருகில் டிப்பர் வாகனத்தை நிறுத்திய சாரதி, வாகன நடமாட்டமில்லாத சமயத்தில், டிப்பரை பின்னால் செலுத்திஈ ஆலயத்தை உடைத்து விட்டு அங்கிருந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை நடத்திய பொலிஸ், இராணுவ புலனாய்வாளர்கள் டிப்பரை அடையாளம் கண்டுள்ளனர்.

இன்று டிப்பர் மீட்கப்பட்டது. சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு

சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி...

எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே

எங்​களை கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு நன்றி...

இந்தியா முழுவதும் சிஜேபி போராட்டம் எதிரொலி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் விலகல் – முழு விவரம்

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் போராட்​டம் தீவிரமடைந்​ததை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்