கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் என்ன நடக்கும்?

Date:

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் இலங்கைக்கு பேரழிவு தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று கடல் உயிரியலாளர் ஆஷா டி வோஸ் எச்சரித்துள்ளார்.

சி.என்.என் நியூஸுடன் பேசிய ஆஷா டி வோஸ், எண்ணெய் கசிவு நாட்டின் கடலோரப் பகுதியில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

இது கடல் சூழலில் பாரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இரசாயனங்களை கொண்டு செல்லும்போது கொழும்பு கடற்கரையில் தீப்பிடித்தது. கப்பலின் இருந்த சரக்குகள் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் குப்பைகள் கரையொதுங்கி வருகிறது.

இலங்கை கடலிலிருந்து கப்பலை மேற்கு நோக்கி ஆழ் கடல்களுக்குள் இழுக்கும் நடவடிக்கைகள் நேற்று நிறுத்தப்பட்டன, படகு மூழ்கத் தொடங்கி கடற்படுக்கையில் மோதியது. இருப்பினும், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்