மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்ட 10 பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதானவர்களின் வழக்கு மீண்டும் இன்றைய திகதியில் நீதிமன்றிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி கே.சுகாஸ், சட்டதரணி ரம்சின் மற்றும் சட்டத்தரணி ஜெயசிங்கம் ஆகியோர்கள் ஆஜராகியிருந்தனர்.

இவ் வழக்கு தொடர்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இவ் வழக்கில் 2 பெண்களும் பொலிசாரால் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுட்டிகாட்டப்பட்டது. நீதிமன்றம் மிகுந்த கரிசனையோடு பெண்கள் தொடர்பான விசேட அறிக்கையினையை அடுத்த தவணையில் தாக்கல் செய்யுமாறு பணித்திருக்கிறது. அடுத்த தவணையில் பொலிசார் பெண்கள் தொடர்பான சாதகமான அறிக்கையினை சமர்ப்பிப்பார்கள் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.

கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேரும் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை நீதிபதி எம்.எச்.எம்.பசில் முன்னிலையில் பொலிசாரினால் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்