குருநாகல் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சந்தேக நபர்கள் இருவரின் தனிமைப்படுத்தல் முடித்த பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி. அஜித் ரோஹன கூறியதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த கொண்டாட்டம் நடந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர்கள் உட்பட ஒரு குழு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேயருக்கான பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) குளியாபிட்டிக்கு மாற்றப்பட்டார்.



