நாளை தபால் நிலையங்கள் திறக்கும்!

Date:

இன்று பிரதி அஞ்சல்மா அதிபதி, அஞ்சல்மா அதிபதி மற்றும் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலின்  பி்ன்னர்  எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க  நாளை தபால் நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

COD  Speed Post EMS  போன்றவற்றினை மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியுடன் சுகாதார நடை முறைகளை பேணியவாறு  நாளை விநியோகம் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்படும்  தடுப்பூசியினை அனைவரும் பெற்றுக்கொள்ள ஆவன செய்வதுடன் . சுயவிருப்பத்தின் பெயரில்  தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள மறுக்கும் உத்தியோகத்தரிடம் இருந்து தனது சுயவிருப்பத்தின் படி மறுதலிப்பு செய்தமை பற்றி கடிதம் ஒன்றினை பெற்று தபாலதிபர்கள் தங்கள் வசம் வைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

பிரதேச செயலகங்கள் மூலம் கிடைக்கும் கொடுப்பனவுகளுக்காக பணத்தேவை ஏற்படின்  பிராந்திய கணக்காளரிடம் இருந்து காசோலையினை பெற்று கொடுப்பனவு நடவடிக்கை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

விநியோக காரியாலயம் அல்லாத உபதபாலகங்கள்  மற்றும் கட்டாய தேவையற்ற ஆளணியினரை  தற்போது கடமைக்கு அழைக்க வேண்டிய  அவசியமில்லை.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்