BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

Date:

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட காட்சியறை இன்று (16) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் ஊரணி பகுதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட BYD காட்சியறையின் தவிசாளர் தவபாலன் ஹரி பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சரித் பண்டித ரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டு காட்சியறையை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன. பின்னர் மட்டக்களப்பு மாவட்ட BYD காட்சியறையின் தவிசாளர் தவபாலன் ஹரி பிரதாப் மற்றும் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரித் பண்டித ரத்ன ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரிகள், விநியோகஸ்தர்கள், வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், சர்வமதத் தலைவர்கள், அழைக்கப்பட்ட விசேட விருந்தினர்கள் மற்றும் l என பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்