சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் ஹீரோ விஜய் மகன், ஹீரோயின் விஜய் சேதுபதி ‘மகள்’: இது எப்படி இருக்கு?

Date:

உப்பேனா தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் ஜேசனும், விஜய் சேதுபதியின் ரீல் மகளான க்ரித்தி ஷெட்டியும் சேர்ந்து நடித்தால் அம்சமாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

புதுமுகம் புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி சேர்ந்து நடித்த உப்பேனா தெலுங்கு படம் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி தியேட்டர்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ரூ. 22 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது.

அந்த படத்தில் ஹீரோயின் க்ரித்தி ஷெட்டியின் தந்தை கம் வில்லனாக நடித்து தெலுங்கு ரசிகர்களை மிரள வைத்தார் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பேனாவும் சூப்பர் ஹிட்டானது.

உப்பேனா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியிருக்கிறார் என்றும், அதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்புகிறார் என்றும் தகவல் வெளியானது. மாஸ்டர் படப்பிடிப்பின்போது உப்பேனா ரீமேக் குறித்து விஜய்யிடம் விஜய் சேதுபதி தெரிவிக்க அவரும் ஓகே சொன்னதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

க்ரித்தி ஷெட்டி தற்போது மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் உப்பேனாவை ஜேசன் சஞ்சய் மற்றும் க்ரித்தி ஷெட்டியை வைத்து ரீமேக் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் விஜய்யின் மகனுக்கோ கேமராவுக்கு முன்னால் இருப்பதை விட பின்னால் இருக்கவே விருப்பமாம்.

தன் அப்பாவை வைத்து படம் இயக்க விரும்புகிறாராம் ஜேசன். ஆனால் அதற்கு முன்பு பிற இயக்குநர்களிடம் உதவியாளராக வேலை செய்து அனுபவசாலியான பிறகே விஜய்யை இயக்குவாராம்.

அவரை கேமராவுக்கு பின்னால் அல்ல மாறாக முன்னால் பார்க்க விஜய் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையே பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இதை பார்த்த க்ரித்தியோ, நான் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது என் கையில் 3 தெலுங்கு படங்கள் உள்ளன. புதுப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் நானே தெரிவிக்கிறேன் என்று சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்