கிளிநொச்சியில் கிணற்றில் வயோதிபப் பெண்ணின் சடலம்!

Date:

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் இன்று வீட்டு கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண் தனிமையில் வசித்துவந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

வேலாயுதம் பரமேஸ்வரி (74) என்பவரே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தவறிவீழ்ந்தாரா? அல்லது தற்கொலையா? கொலையா? என
தர்மபுரம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்