இன்று பிரதி அஞ்சல்மா அதிபதி, அஞ்சல்மா அதிபதி மற்றும் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலின் பி்ன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க நாளை தபால் நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
COD Speed Post EMS போன்றவற்றினை மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியுடன் சுகாதார நடை முறைகளை பேணியவாறு நாளை விநியோகம் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்படும் தடுப்பூசியினை அனைவரும் பெற்றுக்கொள்ள ஆவன செய்வதுடன் . சுயவிருப்பத்தின் பெயரில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள மறுக்கும் உத்தியோகத்தரிடம் இருந்து தனது சுயவிருப்பத்தின் படி மறுதலிப்பு செய்தமை பற்றி கடிதம் ஒன்றினை பெற்று தபாலதிபர்கள் தங்கள் வசம் வைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
பிரதேச செயலகங்கள் மூலம் கிடைக்கும் கொடுப்பனவுகளுக்காக பணத்தேவை ஏற்படின் பிராந்திய கணக்காளரிடம் இருந்து காசோலையினை பெற்று கொடுப்பனவு நடவடிக்கை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
விநியோக காரியாலயம் அல்லாத உபதபாலகங்கள் மற்றும் கட்டாய தேவையற்ற ஆளணியினரை தற்போது கடமைக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை.




