தென்மராட்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
தாயார், மகன், மகள்கள் இருவர் என நான்கு பேர் தொற்றிற்குள்ளாகி சில தினங்களின் முன்னர் அனைவரும் சிகிச்சை மையங்களிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் தொற்றிற்குள்ளான ஒருவர் கர்ப்பிணி பெண். திருமணமாகி கண்டியில் வசிக்கிறார். வளை காப்பு நிகழ்விற்காக தென்மராட்சி வந்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் தொற்றிற்குள்ளாகும் கர்ப்பிணிகளை சிகிச்சையளிக்கும் இடத்தை தீர்மானிக்க முடியாமல் வடக்கு அதிகாரிகள் திண்டாடி வருகிறார்கள். இதனால் தொற்றிற்குள்ளாகும் கர்ப்பிணிகள் பெரும் அசளகரியத்தை சந்தித்து வருகிறார்கள்.
மகப்பேற்று வைத்தியர் இல்லாத சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலேயே தற்போது கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அருகிலுள்ள ஆதார வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டுமென்ற சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையையும் வடக்கு, யாழ் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.




