நாட்டில் நேற்று 2,269 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொறறாளர்களின் எண்ணிக்கை 135,796 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,249 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 20 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.
தற்போது 26,102 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 1,145 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 108,802 ஆக உயர்ந்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 1,473 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.




