இன்று 60 பேர்: வடக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

இன்று (14) வட மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று வடமாகாணத்தை சேர்ந்த 585 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 48 பேர், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவர், மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

கிளிநொச்சியில் தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்களான 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் இருந்து 7 பேரும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 40 பேரும், சிறைச்சாலையிலிருந்து ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் செர்க்கப்பட்ட 4 பேர், திருநேல்வேலி தனியார் வைத்தியசாலையில் ஒருவர்,  யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கரவெட்டி சுகாதார வைததிய அதிகாரி பிரிவில் ஒருவர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும் தொற்றிற்குள்ளாகினர்

 

 

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்