சடுதியான வீழ்ச்சி: நேற்று 310 தொற்றாளர்கள்!

Date:

நாட்டில் நேற்று 310, COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,552 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 291 பேர் மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 79,392 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் 64 வைத்தியசாலைகளில் 3,654 பேர்  கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 475 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 79,422 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று சந்தேகத்தில் 451 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்