ஜோசப் ஸ்டாலின் கைது: ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையாளர் கண்டனம்!

Date:

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார்.

“இன்று மாலை 6 மணியளவில் பிரபல மனித உரிமைகள் பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்று இலங்கையில் இருந்து குழப்பமான செய்திகளை நான் கேட்கிறேன்,” என்று அவர் நேற்று ருவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.

ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணி சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று மேரி லாலர் மேலும் கூறினார்.

மனித உரிமைப் பாதுகாவலர்களின் இத்தகைய செயற்பாடுகள் ஆதரிக்கப்பட வேண்டுமே தவிர தண்டிக்கப்படக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்