30.7 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் பிரபாத் ஜெயசூர்ய!

இலங்கையின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் தெரிவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் பிரபாத் ஜெயசூர்யாவுடன் இங்கிலாந்தின் ஜொனி பேர்ஸ்டோவும், பிரான்சின் இளம் வீரர் குஸ்டாவ் மெக்கியோனும் இடம்பெற்றுள்ளனர்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி, இலங்கையின் சுழற்பந்து ஹீ ரோவாக உருவெடுத்துள்ளார்.

காலியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அறிமுகப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 6/118 மற்றும் 6/59 என விக்கெட்டுக்களை கைப்பற்றி, இலங்கை வெற்றிபெற உதவினார்.

அதை தொடர்ந்து நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் அவரது விக்கெட் வேட்டை தொடர்ந்தது.

காலியில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை தோல்வியடைந்த போதிலும், ஜெயசூர்யா இரண்டு இன்னிங்ஸ்களிலும் 5/82, 4/135 என 9 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ஜெயசூர்யா  நான்காவது தடவையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெறும் 3 டெஸ்ட்டில் ஆடி இந்த சாதனையை படைத்தார். முதல் இன்னிங்ஸில் 3/80,  இரண்டாவது இன்னிங்ஸில் 5/117 என விக்கெட்டுக்களை கைப்பற்றி,  இலங்கை போட்டியை வென்று தொடரை சமன் செய்ய உதவியிருந்தார்.

இதேவேளை, ஜூன் 2022 ஐசிசியின் ஆண்களுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜொனி பேர்ஸ்டோவ் ஜூலை மாதத்திலும் மிரட்டினார்.

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்திருந்தார்.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் அசத்தியிருந்தார்.

இவர்களுடன், பிரான்ஸின் இளம் வீரர் குஸ்டாவ் மெக்கியோன் சர்வதேச கிரிக்கெட்டில் கவனத்தை ஈர்த்துள்ளார்.  டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதிச் சுற்றில் அறிமுகமான அவரது ஆட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மிக இளம் வயதில் டி20 போட்டிகளில் சதம் அடித்த சாதனையையும் படைத்துள்ளார்.

18 வயதான அவர் செக் குடியரசுக்கு எதிரான தனது முதல் போட்டியில், 54 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். பின்னர் சுவிட்சர்லாந்துக்கு எதிராக 109, நோர்வேக்கு எதிராக 101 என அடுத்தடுத்து சதங்கள் அடித்தார்.

டி20 வடிவத்தில் அடுத்தடுத்து சதம் அடித்த முதல் வீரரும் அவர்தான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment