24.6 C
Jaffna
January 3, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

‘இயேசுவின் பெயரால் தேவாலயத்தில் இனி இப்படி நடக்காது’: கனடா பழங்குடி மாணவர் படுகொலைக்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்!

கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய உறைவிட பாடசாலைகளில் பழங்குடியின மாணவா்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினாா்.

கனடாவில் 1900 ஆம் ஆண்டுமுதல் 1970 கள் வரை பூா்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தேவாலய உறைவிடப் பாடசாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனா்.

பழங்குடியினரிடையே மதத்தையும், தங்களுடைய கலாசாரத்தையும் திணிப்பதற்காக இந்த நடவடிக்கையை அன்றைய அரசுகள் மேற்கொண்டன. அப்போது கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய உறைவிடப் பாடசாலைகளில் மாணவா்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

உறைவிடப் பாடசாலைகளில் பழங்குடியின மாணவா்கள் தாய்மொழியில் பேசியதற்காக கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனா். உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் மாணவா்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனா் என்பதை கனடா அரசு ஏற்றுக்கொண்டது.

உறைவிடப் பாடசாலைகளில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டன. கனடா கிறிஸ்தவ தேவாலயமும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு, அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தது.

இதற்கு, தற்போதைய கத்தோலிக்க போப் மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், 6 நாள் பயணமாக கனடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், திங்கள்கிழமை முதல் நிகழ்வாக அல்பொ்டாவில் எட்மான்டனின் தெற்கு பகுதியில் மிகவும் பாழடைந்த நிலையில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலய உறைவிடப் பாடசாலையில் குழுமியிருந்த பூா்வகுடி மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்களிடையே உரையாற்றினாா்.

அப்போது, ‘பூா்வகுடி மக்களுக்கு ஏராளமான கிறிஸ்தவா்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மிகுந்த தாழ்மையுடன் மன்னிப்பு கோருகிறேன். இந்தப் பாடசாலைகளில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடூரம். இதுபோன்ற மிகப் பெரிய கொடூரங்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு பொருந்தாதவை என்பதையே கிறிஸ்தவ மத நம்பிக்கை நமக்கு எடுத்துரைக்கிறது’ என்று போப் ஃபிரான்சிஸ் கூறினாா்.

பூர்வகுடி மக்களை கிறிஸ்தவ சமூகத்தில் கட்டாயமாக இணைத்துக்கொள்வது அவர்களின் கலாச்சாரங்களை அழித்து, அவர்களது குடும்பங்களை துண்டித்து, தலைமுறைகளை ஒதுக்கிவைத்தது இன்றும் உணரப்படுகிறது என்றார்.

எட்மண்டனுக்கு தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்டாவில் உள்ள மாஸ்க்வாசிஸில் கூடிய ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களிடம், “பழங்குடி மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த தீமைக்கு நான் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று பிரான்சிஸ் கூறினார்.

உறைவிடப் பாடசாலைகளில் இருந்து திரும்பி வராத குழந்தைகளின் நினைவுகள் தனக்கு “துக்கம், கோபம் மற்றும் அவமானம்” ஆகியவற்றை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

“இங்கிருந்து, வலிமிகுந்த நினைவுகளுடன் தொடர்புடைய இந்த இடத்திலிருந்து, நான் புனித யாத்திரையாகக் கருதுவதைத் தொடங்க விரும்புகிறேன். ஒரு தவம் யாத்திரை,” என்று கூறினார்.

“இயேசுவின் பெயரால், தேவாலயத்தில் இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காது” என்றார்.

விழாவின் ஒரு பகுதியாக, பிரான்சிஸ் ஒரு ஜோடி காலணிகளை பூர்வகுடி தலைவர் ஒருவரிடம் வழங்கினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பூர்வகுடி குழு ரோம் சென்றபோது, இந்த காலணிகளை போப்பிடம் கொடுத்தனர். உறைவிடப் பாடசாலைகளில் இருந்து வீட்டிற்கு வராத குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த காலணிகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த காலணிகளை போப், தற்போது பூர்வகுடி தலைவரிடம் ஒப்படைத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

Leave a Comment