சன் ரைசர்ஸ் அணியிலிருந்து மிட்ஷெல் மார்ஷ் விலகல்: இங்கிலாந்து அதிரடி வீரர் ஒப்பந்தம்

Date:

2021 ஐபிஎல் ரி20 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் மிட்ஷெல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளார் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேஸன் ரோய் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேஸன் ரோய்க்கு அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதே விலைக்கு சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ரி20 தொடரில் களமிறங்கிய மிட்ஷெல் மார்ஷ், ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மிகவும் கவலை தெரிவித்திருந்த நிலையில் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜேஸன் ரோய் ஏலத்தில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டானியல் சாம்ஸ் எடுக்கப்பட்டார். ஆனால், சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ரி20 தொடர், ஒருநாள் தொடரில் ஜேஸன் ரோயின் அதிரடி ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ரி20 போட்டியில் 132 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள ஜேஸன் ரோய், ஒருநாள் தொடரில் 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வோர்னருடன் சில நேரங்களில் பேர்ஸ்டோ களமிறங்கும் நிலையில் மற்றொரு நல்ல தொடக்க ஆட்டக்காரராக ஜேஸன் ரோய் கிடைத்துள்ளார். கடந்த ஆண்டு சீசனில் வோர்னருக்குச் சரியான தொடக்க ஆட்டக்காரர் அமையாமல் அடிக்கடி ஜோடியை மாற்றிக்கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்ஷெல் மார்ஷ் அடிப்படை விலையாக ரூ.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார். அதை விலைக்கு ஜேஸன் ரோய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மிட்ஷெல் மார்ஷ் பங்கேற்க முடியாமல் போனதால், அவருக்கு பதிலாக மே.இ.தீவுகள் சகலதுறை வீரர் ஹோல்டர் சேர்க்கப்பட்டார். இந்த முறை ஜேஸன் ரோய் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்