திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

Date:

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மறுபுறம் தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையே முரண்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விவகாரத்தை தற்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனக் கூறிய டக்ளஸ் தேவானந்தா, தனக்கான காலம் வரும்போது அதற்கான உரிய செயற்றிட்டத்தை முன்வைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் மும்மன்னர்களின் சிலை, உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் சிலை, முத்திரைச் சந்தியில் சங்கிலியனின் சிலை மற்றும் மடத்தகடியில் தனிகாசலம் அடிகளாரின் சிலை உள்ளிட்டவற்றை நிறுவுவதற்கு தான் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் கடந்த காலங்களில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை நினைவூட்டிய அவர், எதிர்காலத்திலும் உரிய நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திர மாலினி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்