நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

Date:

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை. எம். இம்ரியாஸ், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் ஒரே நாளில் தேசிய மட்டத்திலான 3 உயரிய கௌரவங்களைப் பெற்று நிந்தவூர் பிரதேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த 29.09.2026 செவ்வாய்க்கிழமை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மாணவத்தூதுவர் தேசிய மாநாடு – 2026” இன் போதே இக் கௌரவங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

இம்மாநாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறந்த உத்தியோகத்தருக்கான உத்தியோகபூர்வ அங்கீகாரம், University Student Ambassador National Programme on Child Protection திட்டத்தின் களமட்டச் செயற்பாடுகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கான விசேட பாராட்டு மற்றும் தேசிய மாணவத்தூதுவர் நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்திற்கான பதக்கம் ஆகிய மூன்று முக்கிய கௌரவங்களை   வை. எம். இம்ரியாஸ் தனதாக்கிக் கொண்டார்.

தேசிய மட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புகழை உயர்த்திய இச் சாதனையாளரை கௌரவிக்கும் வகையில், நிந்தவூர் பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமான ஏ. எம். அப்துல் லத்தீப் அவர்கள் பிரதேச செயலகம் சார்பாகத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் நேரில் தெரிவித்துக் கொண்டார்.

தேசிய அளவில் சிறுவர் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இவருக்கு நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...

தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை...

நிந்தவூரில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பாலர்களுக்கும் மகிழ்ச்சிப் பரிசுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்