மன்னாரில் நீண்டநாட்களின் பின்னர் டீசல், மண்ணெண்ணெய் விநியோகம்!

Date:

மன்னார் நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று வியாழக்கிழமை (9) காலை முதல் வாகனங்களுக்கான டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

நீண்ட நாட்களாக மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு டீசல் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை. இதனால் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

மேலும் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கும் டீசல் இல்லாமையினால் பேருந்து உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் வாகனங்களுக்கான டீசல் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (9) காலை முதல் மண்ணெண்ணை வழங்கப்பட்டது.

குடும்ப அட்டை பரிசீலிக்கப்பட்டு 500 ரூபாவிற்கு மண்ணெண்ணை வழங்கப்பட்டது.

மேலும் பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியுடன் காட்டுக்குகைக்குள் குடித்தனம் நடத்திய ரவிச்சந்திரனுக்கு பிணை!

உடதும்பர காவல் பிரிவுக்கு உட்பட்ட கரம்பகேதிய பகுதியில், மலை உச்சியில் உள்ள...

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்