கூலித்தொழிலாளியை நடுவீதியில் அடித்து விழுத்தி 5 கிலோகிராம் கோதுமை மா திருட்டு: யாழில் சம்பவம்!

Date:

வடமராட்சி, வதிரி பகுதியில் கூலித் தொழிலாளியை தாக்கி 5 கிலோகிராம் கோதுமை மா திருடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (7) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

தம்பசிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கூலித் தொழிலுக்காக உடுப்பிட்டி பகுதிக்கு சென்றிருந்தார். அன்றைய நாள் கூலியில் 5 கிலோகிராம் கோதுமை மா வாங்கி, தனது சைக்கிளின் பின்னால் வைத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

மாலை 3 மணியளவில் வதிரி- உடுப்பிட்டி வீதியில் டேவிட் முகாமிற்கு அண்மையாக, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ஆள் நடமாட்டமில்லாத வேளையில் திடீரென அவரை வழிமறித்து அடித்து நிலத்தில் விழுத்தி, கோதுமை மா பையை திருடினர்.

அவர் கூச்சலிட்ட போது, முகம் மற்றும் உடலெங்கும் கடுமையாக தாக்கி விட்டு கோதுமை மாவுடன் தப்பிச் சென்றனர்.

அதன் பின்னர் அந்த வழியால் வந்தவர்கள், நிலத்தில் விழுந்தவரை எழுப்பி, வீடு திரும்ப உதவி செய்தனர்.

நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுகளின் எல்லைப்பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் இவ்வாறான பல வழிப்பறி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்