காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

Date:

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்கோபிட்டியவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 77 வயதுடைய எம்.செபஸ்தியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி புலத்கோபிட்டியவிலிருந்து இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள தனது மகனின் வீட்டுக்கு வந்த குறித்த நபர் 20 திகதி காணாமல் போன நிலையில் அன்றைய தினம் மகன் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

முறைப்பாட்டையடுத்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தேடப்பட்டு வந்த போது நேற்று (29) இம்புல்பிட்டிய பகுதியில் மகனின் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சடலமொன்று கிடப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சடலம் தனது தந்தையென மகன் உறுதி செய்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்...

தமிழகத்தில் 84.29% வாக்குப் பதிவு – புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உறுதி செய்த சர்வதேச நீதிமன்றம்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, தனது "போதைப்பொருள் மீதான போர்"...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்