30.9 C
Jaffna
April 19, 2024
இந்தியா

ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை?: திமுக கேள்வி

கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து, குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் தயாநிதிமாறன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேயான பாச உறவை என்றும் பிரிக்க முடியாது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது அதிமுக.

ஆனால், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என முதல்வர் பழனிசாமி சொல்கிறார். சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு தற்போது தேர்தலுக்காக பொய் சொல்கிறார். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் வகையில் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்பிறகு, தமிழகத்தில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். நர்சிங் படிக்க வேண்டும் என்றாலும், கலை, அறிவியல் கல்லூரியில் சேரவும் தகுதித் தேர்வு அவசியம் என்கின்றனர். எனவே, தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார். என்ன உறவுமுறை பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள். இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கேஜ்ரிவால்” – அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

Pagetamil

ஒரே ஸ்கூட்டர்… 270 முறை விதிமீறல்: பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

Pagetamil

சல்மான் கானுடன் தனிப்பட்ட விரோதம் கிடையாது… ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கொல்ல துடிக்கும் பின்னணி!

Pagetamil

அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு

Pagetamil

ரூ.200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி!

Pagetamil

Leave a Comment