இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

Date:

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள் நுழைவதற்கு சில கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. கங்​கோத்ரி கோயில் நிர்​வாகக் குழு​வின் தீர்​மானத்​தின் ​படி, இந்து அல்​லாதவர்​கள் ‘பஞ்​சகவ்​யம்’ உட்​கொண்​டால் மட்​டுமே கோயிலுக்​குள் நுழைய அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

அவர்​கள் சனாதன தர்​மத்தை பின்​பற்​றுகிறார்​கள் என்​பதை உறு​திப்​படுத்த, பசு​வின் சிறுநீர் உள்​ளிட்ட பொருட்​கள் கலந்த பஞ்​சகவ்​யத்தை உட்​கொள்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ள​தாக கங்​கோத்ரி கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. பசு​வின் பால், தயிர், நெய், கோமி​யம் (பசு​வின் சிறுநீர்) மற்​றும் பசு​வின் சாணம் ஆகிய 5 பொருட்​களு​டன் கங்கை நீரும் கலந்த கலவையே பஞ்​சகவ்​யம் ஆகும்.

இதுகுறித்து யமுனோத்ரி கோயில் நிர்​வாக செய்​தித் தொடர்​பாளர் புருஷோத்​தம் உன்​னியல் கூறும்​போது, “நாங்​கள் பல காலங்​களாக பஞ்ச கவ்ய பாரம்​பரி​யத்​தைப் பின்​பற்று​கிறோம். சனாதனத்​தின் மீது ஈடு​பாடு இல்​லாதவர்​களின் வருகை அதி​கரித்து வரு​கிறது. எனவே, சனாதனிகள் மட்​டுமே சன்​ன​தி​யில் தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை அனு​ம​திக்​கும்​” என்​றார்​.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்