சிவகார்த்திகேயனின் ‘டான்’ வசூல் சாதனை: 12 நாட்களில் ரூ.100 கோடி!

Date:

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் ‘டான்’. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் கடந்த மே 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டான் வெளியாகி 12 நாட்களே ஆன நிலையில் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுக்கு இது இரண்டாவது ரூ.100 கோடி க்ளப் படம். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘டாக்டர்’ தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்