ஜூன் முதலாம் திகதி முதல் துறைமுகத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் டொலரில் செலுத்தப்பட வேண்டும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் துறைமுக அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.
இலங்கை எதிர்நோக்கும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வருடாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




