அமைதியை நிலைநாட்டவே பொலிஸ் திணைக்களம்; போரை அறிவிப்பதற்கல்ல: சட்டத்தரணிகள் அமைப்பு ‘குட்டு’!

Date:

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு எதிர்ப்பாளர் இறந்தமை, பொலிசார் அதிகபட்ச சக்தியை பிரயோகித்ததையே புலப்படுத்துகிறது. மாறாக, பொலிசார் தற்போது சொல்வதை போன்ற குறைந்தபட்ச சக்தியை அல்ல என்று ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க, பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு அதிகபட்ச பலத்தை பயன்படுத்தும்போது பொலிஸார் பல சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.

பொலிஸ்துறை நாட்டில் அமைதியைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டது என்றும் போரை அறிவிப்பதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

அதிகபட்ச பலத்தை பயன்படுத்துவதற்கு முன்னர் பொலிசார் பல விதிகளுக்கு இணங்க வேண்டும் என சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதால், அமைதியை பாதுகாப்பதற்கு சில நடவடிக்கைகளை பொலிஸார் எடுக்க வேண்டும் எனவும் விஜேநாயக்க மேலும் தெரிவித்தார்.

அவசரமாக தேவைப்படும் போது மட்டுமே காவல்துறை அதிகபட்ச பலத்தை பயன்படுத்த முடியும் என்றும், அதுவும் அதிகாரிகள் முழங்காலுக்கு கீழே எச்சரிக்கை குண்டுகளை சுடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

எனினும், குறித்த நபர் வயிற்றில் சுடப்பட்டதாக விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்